Showing posts with label Vehicle. Show all posts
Showing posts with label Vehicle. Show all posts

Nov 12, 2015

கார் பேனெட்டில் எலிகள் - ஜாக்கிரதை!

கார் வைத்திருப்பவர்கள் சர்வீஸ் பிரச்னைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த எலிகள் காருக்குள் குடும்பம் நடத்தி இன்ஜினுக்குள் கும்மியடிப்பது, சாதுவான கார் உரிமையாளர்களையே கோபம் கொள்ளவைக்கக்கூடிய விஷயம். எலிகளால் வெறும் சர்வீஸ் செலவு மட்டுமில்லை; வயர்களைக் குதறி, கனெக்ஷன்களை மாற்றி விடுவதால், சில நேரங்களில் கார்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகூட இருக்கிறது. 
 
 
 
 
பொதுவாக, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பிரச்னையாக இருப்பது எலிகள்தான். காரணம் - கார்களின் பாடி சீலிங்குக்காகத் தயாரிக்கப்படும் பசையில் உள்ள ஒருவித கெமிக்கல் வாசனைக்கு, எலிகள் அடிமை. அந்தப் பசையின் வாடைக்கு வந்துவிடும் எலிகளால் பெரிய தலைவலி. 

என்னதான் கார் பார்க்கிங்கோடு புது வீடு வாங்கி சேஃப்டியாக காரை நிறுத்தினாலும், சேஃப்டியாக வந்து உட்காரும் எலிகளை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்...
 
 
1. எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் & மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். ‘மிளகு..மிளகு.. விலகு விலகு’ என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.
 
2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.
 
3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.
 
 
 
 
5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.
 
6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.
 
 
 
 
7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.

5 ஆண்டு பழைய கார் லாபமா?

                 கார் வாங்கி அஞ்சு வருஷம் ஆயிடுச்சா... உடனே வித்துடு. இந்த கார் இனிமேல் செலவு மேல செலவு வைக்கும்!’’ - இந்த அட்வைஸை கார் வாங்கி ஐந்து ஆண்டுகள் அல்ல, மூன்று ஆண்டுகளிலேயேகூட  பலரும் கேட்டிருப்போம். உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு காரை வைத்திருந்தால், அதிக செலவு வைக்குமா? இல்லாவிட்டால் இதை விற்றுவிட்டு, அதைவிடக் கொஞ்சம் பெரிய காரை வாங்குவது லாபமா, நஷ்டமா?
ஒரு காரை வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டால், அந்த காரை அப்படியே டீலர்ஷிப்பில் கொடுத்துவிட்டு, அதைவிட பெரிய காரை வாங்கினால், எவ்வளவு செலவாகும்? பழைய காரையே தொடர்ந்து மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்தினால், எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு இருக்கிறோம். இதன் மூலம், ஒரு காரைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பயன்படுத்துவது லாபமா அல்லது விற்பனை செய்துவிட்டு, புது கார் வாங்குவது லாபமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கணக்கு எப்படி?

ஆண்டுக்கு அதிகபட்சம் 15,000 கி.மீ பயணிப்பார்கள் என்கிற அடிப்படையில், 5 ஆண்டுகள் ஆன பழைய கார் சுமார் 75,000 கி.மீ ஓடியிருக்கும் எனக் கணக்கிடுவோம். பழைய கார் என்பதால் வங்கிக் கடன், தவணை எல்லாம் முடிந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதேபோல், ஆறாவது ஆண்டில் இருந்து 10-ம் ஆண்டு வரை பராமரிப்புச் செலவுகளைக் கணக்கிடுவோம்.
5 ஆண்டுகள் ஓடிய ஃபோர்டு ஃபிகோவின் செலவுகள் என்னென்ன?
நீங்கள் கையில் வைத்திருக்கும் கார், 2010-ம் ஆண்டு வாங்கிய ஃபோர்டு ஃபிகோ டீசல் காரின் டாப் வேரியன்ட். ஐந்து ஆண்டுகளாகிவிட்ட இதன் தற்போதைய மதிப்பு, 4 லட்சம் ரூபாய். ஆறாவது ஆண்டில் இருந்து 10-ம் ஆண்டு வரை, ஓர் ஆண்டுக்கு சர்வீஸுக்காக 20,000 ரூபாய் செலவு செய்வதாகக் கணக்கில் வைத்துக்கொள்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் பராமரிப்புச் செலவுக்காக மட்டும், ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்வீர்கள். 

டீசல் கார் என்பதால், இடையில் பெரிய செலவுகள் வரலாம். இதற்கென கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கிக்கொள்வோம். பழைய காருக்கு இன்ஷூரன்ஸ் சுமார் 6,000 ரூபாய் வரை செலவாகும். அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 30,000 ரூபாய் இதற்குச் செலவழிப்பீர்கள். ஃபிகோ பொதுவாக, லிட்டருக்கு 16.3 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 15,000 கி.மீ பயணம் என்ற வகையில், டீசலுக்கு ஆண்டுக்கு 48,000 ரூபாய் வரை செலவாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் டீசலுக்காக 2,40,000 ரூபாய் வரை செலவு செய்வீர்கள். டீசல் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்பதால், ஆண்டுக்கு 10,000 என்கிற வகையில் 50,000 ரூபாய் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது நீங்கள் டீசலுக்காக மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு 3.10 லட்சம் ரூபாய் செலவழிப்பீர்கள். 

மேற்சொன்ன செலவுகள் அனைத்-தையும் கூட்டினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஃபோர்டு ஃபிகோவுக்காகச் செலவு செய்யும் தொகை, 5.20 லட்சம் ரூபாய்.

ஹோண்டா அமேஸ் வாங்கினால்?
இப்போது 5 ஆண்டுகள் ஆன பழைய ஃபோர்டு ஃபிகோவை, 4 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதைவிடக் கொஞ்சம் பெரிய காரான ஹோண்டா அமேஸ் டீசல் காரை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஹோண்டா அமேஸ் டாப் வேரியன்ட் டீசல் காரின் விலை, 8.80 லட்சம் ரூபாய். நீங்கள் 4 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்திவிட்டால், மீதி 4.80 லட்சம் ரூபாய்க்குத்தான் தவணை செலுத்துவீர்கள். இந்தத் தொகைக்கான மாதத் தவணை 10,700 ரூபாய். ஆண்டுக்கு 1.28 லட்சம் ரூபாய் தவணை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 4.8 லட்சம் ரூபாய் கடனுக்கு, நீங்கள் கட்டிய தொகை 6,42,000. 
ஹோண்டா அமேஸ் சராசரியாக லிட்டருக்கு 18 கி.மீ மைலேஜ் தரும். ஓர் ஆண்டுக்கு 15,000 கி.மீ காரைப் பயன்படுத்தினால், டீசலுக்குச் செலவு செய்யும் தொகை 43,333 ரூபாய். அடுத்த ஐந்து ஆண்டுகளில் டீசல் விலை ஏறக்கூடும் என்கிற பட்சத்தில், ஆண்டுக்கு 10,000 ரூபாய் வீதம் உயர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு 50,000 ரூபாய் சேர்த்துக்கொள்வோம். டீசலுக்காகச் செலவு செய்யும் மொத்தத் தொகை 2.66 லட்சம் ரூபாய். ஹோண்டா அமேஸின் இன்ஷூரன்ஸ் தொகை என்பது ஆண்டுக்கு சுமார் 10,000  ரூபாய் என்றால், ஐந்து ஆண்டுகளில் இன்ஷூரன்ஸூக்காக மட்டும் சுமார் 50,000 ரூபாய் வரை செலவாகும். முதல் ஐந்து ஆண்டுகளில் ஹோண்டா அமேஸின் சர்வீஸ் செலவுகளுக்காக, அதிகபட்சமாக 50,000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 
இப்போது ஐந்து ஆண்டுகளில் நீங்கள் ஹோண்டா அமேஸுக்குச் செலவு செய்யும் தொகையானது, 10.08 லட்சம் ரூபாய். ஃபிகோவின் செலவைவிட கிட்டத்தட்ட 4.88 லட்சம் ரூபாயைக் கூடுதலாகச் செலவு செய்கிறீர்கள்.
10 ஆண்டுகள் ஆன பழைய ஃபிகோவின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாயை இதில் கழித்துவிட்டால், அமேஸுக்காக நீங்கள் கூடுதலாகச் செலவுசெய்த தொகை 3.38 லட்சம் ரூபாய்.
ஃபிகோவைவிட அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் கையில் இருப்பது புது கார் என்ற வகையில், இந்தக் கூடுதல் 3.38 லட்சம் ரூபாய் ஓகேதான் என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அமேஸ் வாங்காமல் இருந்திருந்தால், தவணை கட்டிய 6.42 லட்ச ரூபாயை நீங்கள் ரெக்கரிங் டெப்பாசிட்டில் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு 8.06 லட்ச ரூபாயாகியிருக்கும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஹோண்டா சிட்டி வாங்கினால்?

இப்போது ஃபிகோவை விற்றுவிட்டு, ஹோண்டா சிட்டி காரை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் மாடலின் தற்போதைய விலை, 10.58 லட்சம் ரூபாய். நீங்கள் ஃபோர்டு ஃபிகோவை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு ஹோண்டா சிட்டியை வாங்குகிறீர்கள். 6.58 லட்சம் ரூபாய்க்கு மாதத் தவணையாக 14,651 ரூபாய் தவணை கட்டுவீர்கள். ஆண்டுக்கு 1,75,812 ரூபாய் கட்டுவீர்கள். ஐந்து ஆண்டுகளில் 8.79 லட்சம் ரூபாய் தவணை கட்ட வேண்டியிருக்கும்.  பெட்ரோல் செலவு ஆண்டுக்கு 66,400 ரூபாய் வரை செலவாகும்.பெட்ரோல் விலை ஏற்றத்தையும் கணக்கில் கொண்டு 50,000 ரூபாய் சேர்த்துக் கொள்வோம். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் எரிபொருளுக்காகச் செலவாகும்.

முதல் ஐந்து ஆண்டுகளில் பராமரிப்புச் செலவுகள் அதிகம் இருக்காது என்பதால், 75,000 ரூபாய் எனக் கணக்கில் வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு இன்ஷூரன்ஸ் 15,000 ரூபாய்க்குள் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக 75,000 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 14.86 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வீர்கள்.

ஃபோர்டு ஃபிகோவைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களின் செலவு 5.2 லட்சம் ரூபாய். நீங்கள் விற்றுவிட்டு செடான் காரான ஹோண்டா சிட்டியை வாங்கினால், நீங்கள் செலவு செய்யும் தொகை 14.11 லட்சம் ரூபாய்.  இதில் ஐந்து ஆண்டுகள் ஆன ஹோண்டா சிட்டியின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாக இருக்கும்.  இதை 14 லட்சம் ரூபாயில் கழித்துவிட்டால்  நீங்கள் ஹோண்டா சிட்டிக்காக செலவு செய்திருக்கும் தொகை மட்டும் 9 லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது; பெரிய கார் நிச்சயம் வேண்டும்; அதிகப் பொருட்கள் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது; பெரிய டிக்கிகொண்ட கார் வேண்டும் என்கிற வகையில், பெரிய காருக்கு அப்கிரேடு செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், 5 ஆண்டுகள் ஆகிவிட்டன; செலவு அதிகமாகிவிடும் என்பதற்காக, புது காரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. செலவு குறைவதற்குப் பதில், அதிகமாக ஆகும் என்பதே உண்மை!
- சார்லஸ்

கார்ல ஊருக்குப் போறீங்களா?

                     குடும்பத்தோடு சொந்த ஊருக்கு, சொந்த காரில் டிரைவ் செய்து கொண்டே போவது ஜாலியான அனுபவம்தான். ஆனால், பல சமயங்களில் வழியில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, ஜாலியான பயணத்தைப் பலரும் சொதப்பல் பயணமாக மாற்றிவிடுவது வாடிக்கையாகி விட்டது. காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது ?
நீண்ட தூரப் பயணம் என்றாலே சிப்ஸ் பாக்கெட், கோலா, சாக்லேட் என அள்ளிப் போட்டுக் கொண்டு காரில் கிளம்புவதை முதலில் நிறுத்துங்கள். சிப்ஸ், கோலா, சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடும்போது, முதலில் உற்சாகம் தொற்றிக்கொள்வது போல இருக்கும். ஆனால், இவை அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி உடம்பைச் சோர்வாக்கிவிடும்.
'கணவர்தானே கார் ஓட்டுகிறார், அப்பாதானே கார் ஓட்டுகிறார்’ என அருகில் உட்காருபவர்கள் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விடக் கூடாது. கார் ஓட்டுபவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வருவது மிக மிக அவசியம். காருக்குள் இருக்கும் எல்லோரும் தூங்கும்போது காரை ஓட்டுபவருக்கு தூக்கம் எளிதில் தொற்றிக்கொள்ளும். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
  காருக்குள் சின்ன ஃப்ரிஜ் அல்லது ஐஸ் கட்டிகள் நிரம்பிய கூலர் பாக்ஸை வைத்திருப்பது நல்லது. பழங்கள், ஜூஸ் ஆகியவற்றைக் கெட்டுப் போகாமல் நீண்ட நேரம் இதில் வைத்திருக்க முடியும்.
  காரில் பயணம் செய்யும்போது சாக்லேட் சாப்பிடுவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள். சாக்லேட்டில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், உடலை விரைவில் மந்தமாக்கி தூக்கத்தை வரவழைக்கும். மேலும், சாக்லேட்டுகள் காரின் டேஷ் போர்டு மற்றும் இருக்கைகளில் பட்டு காரையும் அசுத்தப்படுத்திவிடும்.
சிப்ஸ் சாப்பிடுவதால் பசி குறையாது. கலோரிகள் இதில் அதிகம் என்றாலும், ஃபைபர் இல்லை என்பதால் சீக்கிரத்தில் பசி எடுக்கும். சிப்ஸ் சாப்பிடுவதால் கலோரிகளும், உப்பும்தான் சேர்ந்து கொண்டே போகுமே தவிர, பசி குறையாது.
கோதுமை கலந்த சர்க்கரை இல்லாத ஃபைபர் பிஸ்கெட்டுகளை பயணத்தின்போது அதிகம் சாப்பிடுவது நல்லது. எனவே, சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குப் பதில் நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை எப்போதும் காருக்குள் வைத்திருங்கள்!
வறுத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட உலர் பழங்களை பயணத்தின்போது எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஊட்டச்சத்து அதிகம்; பசியும் அதிகம் எடுக்காது. அதேசமயம், வயிற்றைக் கெடுக்காது என்பதோடு சீக்கிரத்தில் ஜீரணமாகிவிடும். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை மறக்காதீர்கள்.
வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழங்களைப் பயணத்தின்போது அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என்பதோடு, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் இது கொடுக்கும். கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், விரைவில் ஜீரணமாகி விடும். பைபர் சத்தும் இதில் அதிகம்.
கோதுமை ப்ரெட், ஃப்ரூட் சாலட், காய்கறிகள் கலந்த சான்ட்விச் போன்றவற்றை இரவு நேரத்தின்போது சாப்பிடலாம். சான்ட்விச், பயணத்துக்கான சிறந்த உணவு!
கோலா குளிர்பானங்களுக்குப் பதில் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ் குடிக்கலாம். பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ்கள்தான் சரியான வழி. அதேபோல், இளநீர் அதிகமாகக் குடிக்கலாம். டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எனில், பயணத்தின்போது வெறும் பால் குடிப்பது நல்லது. டீ, காபி குடிப்பதைத் தவிர்க்கவே முடியாது என்பவர்கள், ஸ்ட்ராங்காக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது! டீ, காபி அசிடிட்டியை ஏற்படுத்தும்.
பயணங்களின்போது காரமான உணவுகளை முழுக்கவே தவிர்த்துவிடுங்கள். சாலையோர ஃபாஸ்ட் ஃபுட், தாபாக்களில் கூடுமானவரை உணவு உண்ண வேண்டாம். இவை வயிற்றைக் கெடுப்பதோடு, ஜாலியான பயண அனுபவத்தையும் கெடுத்துவிடும். இரவு நேரங்களில் பரோட்டா, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்குப் பதில் இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட விரைவில் ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
பஜ்ஜி, போண்டா, பக்கோடா ஆகிய உணவுகளைப் பயணத்தின்போது சாப்பிட வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களின்போது, வழக்கமாக சாப்பிடும் அளவைவிட கொஞ்சம் சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கக் கூடிய, ஊட்டச்சத்து மிக்க தரமான உணவுகளை உட்கொள்வதே நல்லது.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!